கோவையில் உள்ள கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியில் “முள்ளும் மலரும்” சமூக விழிப்புணர்வு குறும்படம் திரையிடல் மற்றும் போஸ்டர் வெளியீடு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிளஸ்டர்ஸ் மீடியா கல்லூரியின் நிர்வாக இயக்குனர் அரவிந்த், டீன் டாக்டர் குணாளன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சூர்யா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.அதனைத் தொடர்ந்து கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு முள்ளும் மலரும் குறும்படம் திரையிடப்பட்டது. திரையிடு நிகழ்வுக்குப் பிறகு மாணவர்கள் படக் குழுவினருடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
இப்படத்தை சீயான் புரொடக்க்ஷன்ஸ் யாசின் மற்றும் ஏ கே ஈவன்ட்ஸ் அம்மு தயாரித்துள்ளனர். இப்படத்தில் ராம் பிரகாஷ், கஜலட்சுமி, கணியூர் கண்ணப்பதாசன், ரசீத், மணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெகதீஸ்வரன் ரகுகுமார் எழுதியுள்ளார்.
இயக்குனராக தாமரைக்கண்ணன், ஒளிப்பதிவாளர் யாசின், ஒலிப்பதிவு கோவை ஃபிலிம் ஸ்டுடியோ ராமகிருஷ்ணன் மற்றும் குழுவினர், இசை பசுபதி சீனிவாசன், துணை இயக்குனர் பார்த்திபன், ஒளிப்பதிவு உதவி பிரபு, தயாரிப்பு மேலாளர் யாதவ், மக்கள் தொடர்பு ஆண்டனி தாமஸ், ஸ்டில்ஸ் அருண் மற்றும் பலர் பணியாற்றியுள்ளனர்.
இந்நிகழ்வில் நடிகர் ராம்பிரகாஷ், எழுத்தாளர் ஜெகதீஸ்வரன் ரகுகுமார், தயாரிப்பாளர் யாசின் மற்றும் மக்கள் தொடர்பாளர் ஆண்டனி தாமஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தங்களின் சினிமா அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.மேலும் இக்குறும்படத்தை பார்வையிட்ட மாணவர்களும் குறிப்பாக கல்லூரியின் டீன் டாக்டர் குணாளன், சமூகத்தில் நடக்கும் அவலங்களை படத்தின் வாயிலாக எடுத்துக்காட்டியதை பாராட்டி அதை தன் மாணவர்களிடம் சில விளக்கங்களை எடுத்துரைத்து தன் கருத்தையும் பதிவிட்டார்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்