தமிழக அரசு கனரக லாரிகளுக்கு உயர்த்தியுள்ள சாலை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் முருகேசன் செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது.தமிழகத்தில் ஏற்கனவே இயங்கி வந்த 4.50 லட்சம் லாரிகள் கொரோனா தொற்று காலத்திற்கு பின் தொழில் நெருக்கடி மற்றும் உதிரி பாகங்கள் விலை உயர்வு சுங்க கட்டண அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது 2. 50 லட்சம் எண்ணிக்கையான லாரிகள் மட்டும் இயங்குகின்றன.
லாரி தொழிலில் நாளுக்கு நாள் அழிவை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் லாரிகளுக்கு பசுமை வழியாக 500 ரூபாயிலிருந்து 750 ரூபாயாக உயர்த்தி உள்ளது.அத்துடன் லாரிகளுக்கான காலாண்டு வரியில் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆன்லைனில் அபராதம் தங்கள் விதிப்பதை ரத்து செய்யக் கோரியும் மாநில அரசு தெரிவித்துள்ள 32 கால பதிவான சுங்க சாவடிகளை அகற்றையும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 9ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகளை இயக்காமல் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். என்று இந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு