• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சோலையார் சுங்கம் ஆற்றில் குளிக்க சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் 5 பேர் பலி

October 20, 2023 தண்டோரா குழு

வால்பாறை சோலையார் சுங்கம் ஆற்றில் குளிக்க சென்ற கோவை கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் மேற்கு மலை தொடர்ச்சியின் ஒரு பகுதியான வால்பாறை சுற்றுலாத் தலமாகும். இங்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கோவை கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 10 பேர் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.இவர்கள் வால்பாறை அடுத்துள்ள சோலையார் ஆர்ச் அருகே ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது ஆற்றில் ஆழம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்றதால் 5 மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதையடுத்து, இது குறித்து வால்பாறை தீயணைப்பு மற்றும் மீட்புப்படைத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மூழ்கிய 5 பேர் உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில்,தனுஷ்,அஜய்,வினித்,சரத்,
நபீல் அரசாத் ஆகிய மாணவர்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க