• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கரும்புக்கடைப் பகுதியின் நீண்ட நாள் கோரிக்கைகள் சிறுபான்மை நலத்துறை அமைச்சரிடம் மனு

October 18, 2023 தண்டோரா குழு

சிறுபான்மையினருக்கான நலத்திட்டங்கள் வழங்கும் விழாவிற்கு கோவை வந்த
தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மக்கள் தொடர்புச் செயலாளர் அப்துல் ஹக்கீம் சந்தித்தார்.

இச்சந்திப்பில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக பல்வேறு வகையான நலத்திட்டங்களை வழங்கியமைக்கு பாராட்டு தெரிவித்த அப்துல் ஹக்கீம் , கோவை கரும்புக்கடைப் பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய அரசு மேல்நிலைப் பள்ளி,தொடக்கநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளியாகத்தரம் உயர்த்துதல், அனைத்து வசதிகளுடன் கூடிய வங்கி, நூலகம், ராஜ வாய்க்கால், நொய்யல் ஆறு தூர் வாருதல்,உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலபணிகள் விரைந்து முடித்தல், மற்றும் மாணவர்கள் விளையாடிட மைதானம் ஆகிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு மனுவையும் வழங்கினார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் கரும்புக்கடைப் பகுதியில் உடனடியாக நலத்திட்ட உதவிகளை ஆரம்பிக்க ஆவணம் செய்வதாக தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி மற்றும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க