• Download mobile app
18 Dec 2025, ThursdayEdition - 3599
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக பார்வை தினத்தை முன்னிட்டு கோவையில் வாக்கத்தான்

October 15, 2023 தண்டோரா குழு

உலக பார்வை தினம் (WSD) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக “பணிபுரியும் போதும் உங்கள் கண்களை நேசியுங்கள்” என்ற தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, “ஆப்டோமெட்ரிக் தமிழ் நண்பர்கள் சங்கம்” சார்பில் கோவையில் அக்டோபர் மாதம் 15ம் தேதி “பணிபுரியும் போதும் உங்கள் கண்களை நேசியுங்கள்” என்ற தலைப்பில் வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது. ரேஸ்கோர்ஸ் பகுதியில் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வை கோவை மாநகர காவல் துணை ஆணையர் சந்தீஷ் மற்றும் லோட்டஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மதுசுதன் ஆகியோர் துவக்கி வைத்தனர். ரேஸ்கோர்ஸ் பகுதியில் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த வாக்கத்தான் நடைபயணம் நடைபெற்றது.

பணியிடத்தில் பார்வையைப் பாதுகாப்பது, ஆரோக்கியமான கண்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த வாக்கத்தான் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நடைபயணத்தில் ஆப்டோமெட்ரிக் அமைப்பின் நிர்வாகிகள், குமரன், ப்ரீதா ராம்பிரசாத், சாமுவேல் விஜய், அருள் மற்றும் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள், 10க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க