• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் விவசாய நிலங்கள் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதாக புகார்

October 9, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதி கோட்டூர் மலையாண்டி பட்டினம், மதிப்பாதை வழிதடத்தில் கோட்டூர் பேரூராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக விவசாய நிலம் மற்றும் அப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதாகவும் இதனால் விவசாயம் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதாகவும், கால்நடைகள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

மேலும் இது சம்பந்தமாக மாவட்ட வருவாய் அலுவலர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு இவ்விடத்தில் குப்பைகளை கொட்ட கூடாது என்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் குப்பைகள் கொட்டுவது சிமெண்ட் கால்கள் கட்டி இடையூறு செய்து வருவதாகவும் இத்தகைய செயல்களை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிசாமி கோரிக்கை விடுத்தார்.

மேலும் படிக்க