• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ வாமனப் பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி மாதம் உற்சவ திருவிழா!

October 7, 2023 தண்டோரா குழு

கோவை விளாங்குறிச்சி ரோடு விநாயகபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வாமனப் பெருமாள் திருக்கோயில் உள்ளது.

இக்கோயிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு கடந்த இரண்டு வாரங்களாக மகா கணபதி ஹோமம்,அபிஷேகம், அலங்காரம் அர்ச்சனை,திருமலை திருப்பதி வெங்கடாசலபதி தரிசனம்,மகா தீபாராதனை,உச்சி பூஜை, பிரசாதம் வழங்குதல்,ஸ்ரீ குருவாயூரப்பன் அலங்காரம் தரிசனம்,அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து,மூன்றாவது வாரமாக இன்று ஸ்ரீ வாமனப் பெருமாள் திருக்கோயிலில் பிரம்ம உற்சவ திருவிழா நடைபெற்றது.இதில் மூலிகை அபிஷேகம்,தங்க கவசம், அலங்கார தரிசனம்,உச்சி பூஜை மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.இதனை தொடர்ந்து, 2000க்கும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில், கோயில் நிர்வாகிகள் ஜோதிடர் என். குமரேசன்,என்.பழனிச்சாமி,கே. கோகுலகிருஷ்ணன்,ஆர்.சண்முகசுந்தரம் மற்றும் கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், புரட்டாசி மாதம் 23ம் நாள் வரும் அக்டோபர் 10ம் தேதி செவ்வாய்கிழமை அன்று 48ம் நாள் மண்டல பூஜை, அபிஷேக பூஜை, ஸ்ரீ தேவி, பூ தேவி ஸ்ரீ நிவாச பெருமாளுக்கு மாங்கல்ய தாரணம், உற்சவ திருவீதி உலா மற்றும் மகா கலச அபிஷேகம் நடைபெற உள்ளது குறிப்பிட்டதக்கது.

மேலும் படிக்க