• Download mobile app
07 Dec 2025, SundayEdition - 3588
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல், ஆராய்ச்சியின் நிறுவன தின விழா

September 30, 2023 தண்டோரா குழு

பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சியின் நிறுவன தின விழா மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது. நிறுவனத்தின் முதல்வர் டாக்டர் டி.எம். சுப்பாராவ் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் கே. நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில்,

மருத்துவத்துறையில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதற்காக பல்கலைக்கழகத்தில் உள்ள வசதிகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

புகழ்பெற்ற முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.இராணுவ மருத்துவப் படை மயக்கவியல் நிபுணர்
கர்னல் எம். முருகானந்தம்,சென்னை
குழந்தை ஹீமாட்டாலஜி ஆன்காலஜி மற்றும் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை துறை டாக்டர். ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டர் மருத்துவ முன்னணி
டாக்டர் தீனதயாளன் முனிரத்தினம்,
சென்னை அப்பல்லோ மருத்துவமனைகளில் உள்ளஹெர்னியா அறுவை சிகிச்சை மற்றும் வயிற்றுச் சுவர் மறுசீரமைப்பு நிறுவனங்களில் மருத்துவ முன்னணி
டாக்டர் பிரேம்குமார் பாலச்சந்திரன்,
சென்னை ஈ.என்.டி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ஏ. செந்தில் வடிவு ஆகியோர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் டாக்டர் விமல்குமார் நன்றியுரை கூறினார்.

மேலும் படிக்க