• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாஜக அரசை ஆட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல் போராட்டம்

September 12, 2023 தண்டோரா குழு

விலைவாசி உயர்வு வேலையின்மை உள்ளிட்ட பல்வேறு குறைகளை முன்னிறுத்தி பாஜக அரசை ஆட்சியை விட்டு வெளியேற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அனைத்து பொருட்களின் விலை உயர்வு, அரிசி, எண்ணெய்,சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, ஜி எஸ் டி வரி, பெட்ரோலிய பொருட்கள் மீதான வரி, பண மதிப்பிழப்பு, ரயில்வே உள்ளிட்ட பொது நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பாதது, தமிழ் மொழி வளர்ச்சிக்கு தமிழர்கள் காட்டும் ஆர்வத்தை, ஆணவம் என்று நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பேசியது, அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் பேசியிருப்பது, மணிப்பூர் கலவரம், பொது நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் என பல்வேறு விஷயங்களை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

மேலும் இந்த மறியல் போராட்டத்தில் ரேஷன் திட்டத்திற்காக 50,000 மெட்ரிக் டன் அரிசியை வெளிச்சந்தையில் தமிழ்நாடு அரசு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலையை ஒன்றிய அரசு உருவாக்கி இருப்பதாகவும், தமிழ்நாட்டின் மீது ஒன்றிய மோடி அரசு வன்மத்துடன் தாக்குதல் தொடுப்பதாகவும், 12 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழி மேம்பாட்டிற்கு 11.86 கோடியை ஒதுக்கும் ஒன்றிய அரசு சில ஆயிரம் பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருத மொழிக்கு198.83 கோடியை ஒதுக்கி பாரபட்சம் காட்டுவதாகவும், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

கோவை மாவட்டத்தில் ஐந்து இடங்களில் கோவை மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சில தொழில்துறை அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க