• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சனாதனத்தை தொட உங்க தாத்தனாலயே முடியல போடா – கோவையில் பாஜக வினர் போஸ்டர்

September 7, 2023 தண்டோரா குழு

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது போல் பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே அயோத்தியை சேர்ந்த பரமாஹன்ஷ ஆச்சாரியார் என்ற சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரை கொல்ல வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் பேசிய வீடியோ காட்சிகள் வைரலானது.

இந்நிலையில் கொலைவெறி மற்றும் கொலைவெறியை தூண்டும் விதமாக அந்த சாமியார் பேசி இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக உட்பட பல்வேறு திராவிட இயக்கங்கள் அந்ததந்த மாவட்டங்களில் உள்ள மாநகர காவல் ஆணையாளர், அலுவலகங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் சாமியாருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சாமியார் பேசியது சரி என்பது போல் பல்வேறு இந்து அமைப்புகள் தெரிவித்து வருவதால் இந்தியாவில் “சனாதனம்” என்ற வார்த்தை பேசு பொருளாகி உள்ளது.இந்நிலையில் கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் காந்திபுரம் பகுதியில் “சனாதனத்தை தொட உங்க தாத்தனாலயே முடியல போடா” என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த வாசகம் சனாதனத்தை கலைஞர் கருணாநிதியால் கூட தொட இயலவில்லை என்பதை குறிப்பிடும் வண்ணம் உள்ளது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரின் புகைப்படங்களும், கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி பெயர் மற்றும் அவரது புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

மேலும் படிக்க