August 19, 2023
தண்டோரா குழு
மேட்டுப்பாளையம் – கோவை இடையே தினமும் மெமு ரயில் இயக்கப்படுகிறது. சுமார் பத்தாயிரம் பயணிகள் சென்று வருகின்றனர். 8 பெட்டிகளில் ஒரே நேரத்தில் நான்கு ஆயிரன் பேர் வரை செல்கின்றனர். காலையில் அலுவலகம் செல்வோர், கல்லூரி மாணவர்கள் என பீக் ஹவரில் மிகுந்த சிரமம் படுகின்றனர். கூடுதல் டிரிப்புகள் மற்றும் பெட்டிகளுடன் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில்,
” மெமு ரயிலில் 8 பெட்டிகளில் 1000 பேர் வரை செல்லலாம், ஆனால் 4000 பேர் வரை செல்லும் நிலை உள்ளது. காலை 8.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரை இயக்கப்படும் மெமு ரயிலை கூடுதல் டிரிப்புகளுடன், கூடுதல் பெட்டிகளுடன் இயக்க வேண்டும்,” என்றனர்.