• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு துணை போகின்றதோ – ஹைதர் அலி

August 13, 2023 தண்டோரா குழு

2024 ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்காக மத்திய அரசு தொடர்ந்து கலவரத்தை தூண்டி வருவதாக, ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி குற்றம்சாட்டியுள்ளார்.

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பாக, அதன் ஊடகபிரிவு மாநில செயற்குழு கூட்டம் மற்றும், ஊடகத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், குனியமுத்தூர் பகுதியில் உள்ள பெரிய பள்ளிவாசல் அரங்கில் நடைபெற்றது.

கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில தலைவர் ஹைதர் அலி,

திமுக அரசு தொடர்ந்து மத்திய அரசுக்கு துணை போகின்றதோ என்ற கேள்வி அனைத்து மக்களுக்கும் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.ஆனால் மத்திய அரசு,மணிப்பூர் கலவரம் ஹரியாணாவில் கலவரம் என பல்வேறு கலவரங்களை 2024 தேர்தலுக்காக திட்டமிட்டு நடத்தி வருகின்றது.இதனை தொடர்ந்து எதிர்கட்சிகள் ஒன்றினைந்து கூட்டணியை உருவாக்கி அதற்கு இந்தியா என பெயர் வைத்ததால் பாஜகவினர் மிகவும் கவலைபட்டு கொண்டு உள்ளனர். மேலும் இந்தியா என கூட்டணி வைத்துள்ள இந்த அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

இந்நநிகழ்வில், மாநில துணை தலைவர் ரபி, மாவட்ட தலைவர் பெரோஸ்கான் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது, மாநில தொழிற்சங்க ஆலோசகர் முகமது ஆரிப், மற்றும் அசாருதின், செய்யாறு அப்பாஸ், தமிழா தமிழா பாண்டியன், மற்றும் கோவை மாவட்ட பொருப்பாளர் முகமது ரபிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க