• Download mobile app
07 Sep 2025, SundayEdition - 3497
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் 335 கோரிக்கை மனுக்கள் குவிந்தன

July 26, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீஷ், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பழனிசாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் அவர் தெரிவித்ததாவது:

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுகென்று இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. அதன்படி இன்று (நேற்று) நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு,வேலைவாய்ப்பு, வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, வங்கி கடன் உதவி,ஸ்மார்ட் போன், பெட்ரோல் ஸ்கூட்டர்,தையல் இயந்திரம், செயற்கை கால், பேட்டரி வீல்சேர் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்தனர்.

335 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு துறை அலுவலர்களிடம் வழங்கி அம்மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சிங்காநல்லூர், வெங்கடலட்சுமி கல்யாணமஹாலில் நடைபெறவுள்ளது. அனைத்து மாற்றுத்திறனாளிகளும் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.83 ஆயிரத்து 500 வீதம் ரூ.3.34 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 500 வீதம் ரூ.3.17 லட்சம் மதிப்பிலான பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் சார்பில் 15 நபர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.17 ஆயிரம் வீதம் ரூ.2.55 லட்சம் மதிப்பிலான இயற்கை மரண நிதி உதவித்தொகைகளையும் என மொத்தம் 22 நபர்களுக்கு ரூ.9.05 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வழங்கினார்.

மேலும் படிக்க