• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரசன்ன கியாவின் அங்கீகரிக்கப்பட்ட அதிநவீன புதுப்பிக்கப்பட்ட ஹோரூம் திறப்பு

July 23, 2023 தண்டோரா குழு

கியா இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட டீலரான பிரசன்ன கியா, கோவை ராமநாதபுரத்தில் அதிநவீன புதுப்பிக்கப்பட்ட டீலர்ஷிப்பைத் வாடிக்கையாளரின் முன்னெப்போதையும் விட சிறந்த அனுபவத்திற்காக திறந்ததனர். இந்த புதுப்பிக்கப்பட்ட டீலர்ஷிப் மூலம், தங்களது வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் அனுபவத்தை மேம்படுத்துவதில் பிரசன்ன கியா உறுதிபூண்டுள்ளனர்.

கோவை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கரூர் மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் உள்ள பிரசன்ன கியா டீலர்ஷிப் மூலம், கொங்கு பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கியா பிராண்டட் கார்களுக்கான விற்பனை மற்றும் கார் சர்வீஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அனைத்து ஷோரூம்களும் கியா நிறுவனத்தின் புதிய அதிநவீன டீலர்ஷிப் பிரீமியம் தரநிலைகளின்படி வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளது. அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வசதியான விற்பனை அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்து பிரசன்ன கியா ஷோரூம்களும் நகர மையத்தில் அமைந்துள்ளன.

கியா மோட்டார்ஸ் நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் இங்குள்ள டீலர்ஷிப் ஊழியர்கள் சிறப்பான பயிற்சி பெற்றுள்ளனர். இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கார் விற்பனை மற்றும் கார் சர்வீஸ் அனுபவத்தை வழங்குவார்கள்.

இந்தநிகழ்ச்சியில் இணை நிர்வாக இயக்குனர் அனிஷ் பிரசன்னா பேசும்போது,

“கியா மோட்டார்ஸ் உடனான எங்கள் இந்த பயணத்தில் புதுப்பிக்கப்பட்ட இந்த அதிநவீன பிரீமியம் ஷோரூமில் இருந்து இந்த புதிய செல்டோஸ் அறிமுகப்படுத்தியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 9 கார் டிஸ்பிளே வசதியுடன் உள்ள இந்த புதுப்பிக்கப்பட்ட டீலர்ஷிப் மற்றும் எங்கள் குழுவின் நிபுணத்துவம் ஆகியவை புதிய செல்டோஸ் சந்தையில் ஆழமாக ஊடுருவ உதவும். கியா இந்தியாவிடமிருந்து வரும் சிறந்த தயாரிப்புகள் மற்றும் வாடிக்கையாளர் தேவைகள் பற்றிய எங்கள் புரிதலுடன், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறோம்.

மேலும், தமிழ்நாட்டின் மேற்கு பகுதியான கொங்கு பகுதி எங்களின் வளர்ச்சிக்கு உகந்த முக்கிய பகுதியாகும். இந்த பிராந்தியத்தில் புதிய செல்டோஸ் விற்பனை, சேவை மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றில் புதிய அளவுகோலை அமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

விழாவில் குமரன் மில்ஸ் இயக்குனர் கபில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மண்டல மேலாளர் ஸ்ரீஜா, பாங்க் ஆஃப் பரோடா, மண்டல தலைவர் ஸ்ரீனிவாசன், லட்சுமி கோட்ஸ் ஏஜென்சிஸ், செயல் ஒருங்கினைப்பாளர் பாலசுப்ரமணியம், பிரனனா குழுமங்களின் இயக்குனர், தேவிகா, லட்சுமி கார்டு குளோத்திங், தலைவர் சாந்தாராம் மற்றும் பிரசன்ன குரூப் ஆஃப் கம்பெனிஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் அனிஷ் பிரசன்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க