• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேனி படம் எடுக்கிறார், என்று கேள்விப்பட்ட போது, அதிர்ச்சி அடைந்தேன் – நடிகை நதியா!

July 21, 2023 தண்டோரா குழு

கோவை நிலம்பூர் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் எல்.ஜி.எம் திரைப்பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். படத்தின் நடிகைகள் நதியா, இவானா மற்றும் நடிகர் ஹரிஸ் கல்யாண் ஆகியோர் செய்தியாளர் சந்தித்து பேசினர்.

கிரிக்கெட் வீரர் தோனியின் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாகவும், தமிழ் மொழியில் எடுப்பட்ட படமாக வெளியாகவுள்ளது.

நடிகர் ஹரிஸ் கல்யாண் அளித்த பேட்டியானது

கோவை வந்தது சந்தோஷம் எனவும் இயக்குநர் வர முடியவில்லை படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இவனா, நதியா அம்மா ( அம்மா என்று நதியா கூறியதற்கு உடனே …..அக்கா என்று அழைத்தார் ). தோனி அவர்கள் ஒவ்வொரிடமும் படத்தை பார்த்துவிட்டு தனியாக பேசியதாகவும் குடும்பத்துடன் படத்தை பார்த்து ரசித்தார்.

புகை பிடித்தல் , மது அருந்துதல் போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற வில்லை எனவும் இதற்கான எதிர்பை எப்படி பார்க்கிறிர்கள் என்ற கேள்விக்கு – படத்திற்கு தேவைப்பட்டால் , கட்சிக்கு தேவைப்பட்டால் தான் அது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக பேசவில்லை என்றார். மேலும் தோனியின் முதல் மூவியில் நடித்திருப்பது மகிழ்ச்சி என்றார்.அனைத்து தரப்பு மக்களும் பார்க்ககூடிய ஒரு படமாக வந்துள்ளது என்றார்.

நடிகை நதியா பேசுகையில்
,

மணிப்பூர் சம்பவம் – எது பண்ணினாலும் முன்பாகவே யோசிக்க வேண்டும். அனைவருக்கும் மரியாதை தர வேண்டும், இதே நிகழ்வு நிகழ்வு நமக்கும் நடந்தால் எப்படி இருக்கும் என்று யோசிக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

ஹரிஸ் யோட அம்மாவாக நடித்துள்ளேன். படம் முழுவதும் Fun யாக எடுக்கப்பட்டுள்ளது.
எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் அம்மாவை தனியாக காட்டினார்கள் .எனக்கு தகுந்த கதை வந்தால் நிச்சயம் நடிப்பேன். தெலுங்கில் அதிகபடங்கள் வந்தது எனவும் எனக்கு ஸ்கிரிப்ட் தான் முக்கியம் என்றார்.

தேனி படம் எடுக்கிறார், என்று கேள்விப்பட்ட போது, அதிர்ச்சி அடைந்தேன். இந்த பட குழுவினருடன் என்னை பார்க்கும் போது பாட்டி போன்று பீல் ஆகிறது. ஆம் சீனியர் நடிகையாக இருப்பதால் அப்படி உணர்கிறேன் என்றார்.சென்னைக்கும் தோனிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதனால் தான் தமிழில் படம் தயாரித்துள்ளார் சப் டைட்டிலுடன் தான் படத்தை தோனி பார்த்தார். தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் படம் திரையிடப்படுகிறது.ஆக்‌ஷன் பன்ன பண்ண வேண்டும் என்ற ஆசை உள்ளது. அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை ஆனால் அரசியல் சார்ந்த படங்களில் நடிப்பேன் என்றார். எப்பொழுதும் இளமையாக இருக்க காரணம் என்ற கேள்விக்கு உங்க அன்பு தான் காரணம் என்றார். எல்லாம் சாப்பிட வேண்டும் , முதல் மாடி இருந்தாலும் நடந்தே செல்லுங்கள். அதுதான் என் டயட் என்றார்.கமல் சார் உடன் படம் நடிக்க வாய்ப்பு உள்ளது. அவரும் நடிக்கிறார் நானும் நடிக்கிறேன் என்றார்.

நடிகை இவானா பேசும்போது,

தெலுங்கில் ஒரு படம் நடிக்க உள்ளேன். இன்ஸ்டாவில் வாவ் என்ற ரீல் வைரல் ஆகி உள்ளது எனக்கு தெரியும் பூவே பூச்சுடுவா படத்தை இரண்டு முறை பார்த்துவிட்டு தான் நதியா அவர்களை பார்க்க சென்றேன் என்றார். படம் சூட்டிங் போது என்னை காளைப்பார்கள், அதற்கு அப்ப அப்ப நதியா மேம் கவுண்டர் ஒன்னு கொடுத்துருவாங்க. எல்லாரும் அமைதியாக மாறிடுவாங்க. படம் நன்றாக வந்துள்ளது. எல்லாருக்கும் பிடிக்கும் அளவிற்கு இருக்கும் என்றார்.

மேலும் படிக்க