• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மறைந்த மூத்த வழக்கறிஞர் டாக்டர் பா.குப்புசாமியின் நினைவு புகைப்படம் திறப்பு

July 21, 2023 தண்டோரா குழு

மாவட்டத்தின் பிரபல சிவில் வழக்கறிஞர்களில் ஒருவரான மூத்தவழக்கறிஞர் டாக்டர் பா.குப்புசாமி (1932-2016) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவைவழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ளநூலகத்தில் நிறுவப்பட உள்ள அவரது புகைப்படம் இன்று (21.7.2023) திறந்துவைக்கப்பட்டது.

கோயம்புத்தூர் முதன்மை மாவட்ட நீதிபதி எம்.என்.செந்தில் குமார் முன்னிலையில் தமிழ்நாடு மாநிலமனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி(ஒய்வு) எஸ்.பாஸ்கரன், கோவை வழக்கறிஞர் சங்கத் தலைவர் கே.எம்.தண்டபாணி, மூத்தவழக்கறிஞர் மற்றும் சிபிஐ முன்னாள் அரசுவழக்கறிஞர் என்.சுந்தரவடிவேலு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், விருந்தினர்கள் கலந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் குப்புசாமியின் சிறு வாழ்க்கை வரலாறும் புத்தகமும் வெளியிடப்பட்டது. கோயம்புத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கே.எம்.தண்டபாணி வரவேற்றுப் பேசுகையில், நீதிமன்றத்தில் டாக்டர் குப்புசாமியின் வாதங்கள் துல்லியமாகவும், விவரங்கள் நிறைந்ததாகவும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கும் என்றார்.

அவர்வாதிட்ட அனைத்து வழக்குகளிலும் டாக்டர் குப்புசாமி சிறந்த முடிவுகளைப் பெற்றார் என்று கூறினார்.

மேலும் படிக்க