• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக் கடையில் காலி பாட்டில்கள் திரும்ப பெறுவதில் முறைகேடு – பாட்டில் வியாபாரிகள் நல சங்கத்தினர் மனு

July 17, 2023 தண்டோரா குழு

பாட்டில் வியாபாரிகள் நல சங்க கோவை மண்டல தலைவர் ராகவன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் செந்தில் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலெக்டர் காந்தி குமார் பாடியிடம் இன்று மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கோவை மண்டலத்தை சேர்ந்த தொழில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு அதிகப்படியான விலை கொடுத்தும், அந்த நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுக்கப்படவில்லை.

டாஸ்மாக் கடைகளில் திரும்ப வராத காலி பாட்டில்களை திரும்ப வந்ததாக கூறி முறைகேடுகள் நடைபெறுகிறது இதனால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு நிதி இழப்பு ஏற்படுகிறது டாஸ்மாக் பாட்டில்களை சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு கொடுக்காமல் கண்ணாடி உடைவு கம்பெனிக்கு வழங்குவதால் பாட்டில் சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபடும் வியாபாரிகளுக்கும், மற்றும் கிராமப்புற பெண்களுக்கும் வேலைவாய்ப்பு பறிபோகிறது. இதனால் பாட்டில் சுத்தம் செய்யும் தொழிலாளர்கள், பாட்டில் வியாபாரிகள் என சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு கூறியுள்ளனர்.

மேலும் படிக்க