• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேப்டன்(விஜயகாந்த்) நன்றாகவும் சிறப்பாகவும் இருக்கிறார்- பிரேமலதா விஜயகாந்த்

July 15, 2023 தண்டோரா குழு

கோவை விமான நிலையத்தில் தேமுதிக பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

நூலகம் திறப்பது நல்ல விஷயம், அது ஒரு அறிவு சார்ந்த விஷயம் என்பதால் வரவேற்கத்தக்க விஷயம் அனைத்து ஊர்களில் திறந்தாலும் நல்லது தான். மகளிர் உரிமை திட்டத்தைப் பொறுத்தவரை திமுக தேர்தலுக்கு முன்பு அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள், ஆனால் வெற்றி பெற்ற பிறகு தகுதியான பெண்களுக்கு மட்டும்தான் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறுவது கண்டிக்க கூடிய விஷயம். தேர்தலுக்கு முன்பு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தான் நல்ல அரசு. எனவே வாக்குறுதி அளித்தபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கட்டாயம் வழங்க வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு.

நான் தற்பொழுது என்னுடைய இளைய மகனின் அடுத்த படத்திற்கான பட பூஜைக்காக வந்துள்ளேன் அவரது பட பூஜை பாலக்காட்டில் நடைபெறுகிறது அதில் கலந்து கொள்ள தான் நான் வந்துள்ளேன். விஜய பிரபாகரனின் இசைக்கச்சேரி இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப்பெரிய அளவில் மும்பையில் நவம்பர் 25ம் நடைபெற உள்ளது. கேப்டன்(விஜயகாந்த்) நன்றாகவும் சிறப்பாகவும் இருக்கிறார். முக்கியமான நேரங்களில் தொண்டர்களை கட்டாயம் அவர் சந்திப்பார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருத்தவரை எங்களுடைய பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். அனைத்து மாவட்டங்களிலும் எங்களுடைய உட்கட்சி தேர்தல் முடிந்து விட்டது. இதற்கு அடுத்த செயற்குழு பொதுக்குழு உள்ளிட்டவற்றை தலைமை கழகம் விரைவில் அறிவிக்கும். அதனை அடுத்து தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் கட்சியின் வளர்ச்சி அதற்குப் பிறகு தேர்தலுக்கு முன்பு கூட்டணியா இல்லையா என்பதை தலைவர் உரிய முறையில் அறிவிப்பார்.

மக்கள் எந்தக் கூட்டணியை ஏற்று கொள்கிறார்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியா முழுவதும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எண்ணினாலும் அந்த கட்சிகளுக்குள்ளேயே (பாஜக) பல்வேறு வேறுபாடுகள் உள்ளது. எனவே இறுதியில் மக்கள் எந்த கூட்டணியை ஏற்றுக் கொள்கிறார்கள் யார் ஜெயிக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க