• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மின்வாரியம், மின் உரிமை வழங்கும் வாரியம், மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 11, 2023 தண்டோரா குழு

இந்திய மின்சார சட்ட விதி 471 ஐ கடைபிடிக்க வேண்டியும், மின் இணைப்பு வழங்குவதில் வாரிய விதி மீறலை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அனைத்து மின் ஒப்பந்ததாரர்கள் மின் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு இ.பி இ எஸ் பி எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர் சங்கம் தமிழ் மாநில தனியார் மின் பணியாளர்கள் மத்திய சங்கம் தமிழ்நாடு இபி வயரிங் காண்ட்ராக்டர் சங்கம் மற்றும் கோவை திருப்பூர் மாவட்ட தனியார் மின் பணியாளர் சங்கம் தமிழ்நாடு இபி இஎஸ்பி எலக்ட்ரிக்கல் சங்கம் கோவை திருப்பூர் கிளை மின் பணியாளர் மற்றும் பிளம்பர்கள் பாதுகாப்பு நல சங்கம் உள்ளிட்ட அனைத்து மின் ஒப்பந்ததாரார்கள் ,மின் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செஞ்சிலுவை சங்கம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அய்யாசாமி அனைவரையும் வரவேற்று பேசினார் இதில் இ.பி. வயரிங் ஒப்பந்ததாரர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் அமீர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர்,

1956 ஆம் ஆண்டு இந்திய மின்சார சட்ட விதி 471 கடைபிடிக்க வேண்டும் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மட்டுமே மின்சார வேலைகளை மேற்கொள்ள வேண்டும் வாரிய விதி மீறி மின் இணைப்பு வழங்க வழங்குவதை நிறுத்த வேண்டும் ஆன்லைன் விண்ணப்பம் பணம் செலுத்துவது போன்றவற்றில் மின்வாரிய அதிகாரிகளின் தலையிடல் இருக்கக் கூடாது மின் ஒயரிங் பணிகளை மின்சார பணியாளர்கள் செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆர்ப்பாட்டத்தில் ரமேஷ் செல்லத்துரை மாலிய கருப்பண்ணசாமி கோபால் உட்பட கோவை திருப்பூர் சோமனூர் பல்லடம் அவிநாசி என பல்வேறு பகுதிகளை சேர்ந்த அனைத்து மின் ஒப்பந்ததாரர்கள் மின் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க