• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜீலை 10 தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் – ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் கூட்டமைப்பு

July 10, 2023 தண்டோரா குழு

கழிவு பஞ்சின் விலையேற்றம் மற்றும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு முழுவதும் OE மில்கள் கடும் நெருக்கடியில் இருப்பதால் வரும் ஜீலை 10 தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தைக் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 600 க்கு மேற்பட்ட ஒபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் இயங்கி வருகிறது. இவற்றில் நாள் ஒன்றுக்கு 25 லட்சம் கிலோ கிரே நூல் மற்றும் 15 லட்சம் கலர் நூல் உற்பத்தி செய்து நாடு முழுவதும் உள்ள விசைத்தறிகளுக்கு அனுப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக கழிவு பஞ்சின் விலையேற்றம் மற்றும் மின்கட்டண உயர்வால் தமிழ்நாடு முழுவதும் OE மில்கள் கடும் நெருக்கடியில் இருப்பதால் வரும் ஜீலை 10 தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து கோவை தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள்,OE மில்களின் மூலப்பொருட்கள் காட்டன் வேஸ்ட் வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்துள்ளது மட்டுமல்லாமல் தட்டுபாடும் எற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் மின்சார கட்டண உயர்வாலும் தாங்கள் பெரிது பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்கள் மத்திய அரசு மூலப் பொருட்களாக காட்டன் வேஸ்ட் ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் எனவும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உடனடியாக மத்திய ,மாநில அரசுகள் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க