• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென்னிந்தியாவில் 50வது கிளையை கோவையில் துவங்கியது ஹவ்மோர் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம்

July 9, 2023 தண்டோரா குழு

ஹவ்மோர் உயர்தர ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் தென்னிந்தியாவில் 50வது கிளையை கோவை சாய்பாபா காலனி பகுதியி்ல் துவங்கியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மக்கள், மிகவும் விரும்பி உண்ணும், ஐஸ்கிரீம் தயாரிப்புகளான, ஹவ்மோர் ஐஸ்கிரீம், தென்னிந்தியாவில், தனது 50வது கிளையை இன்று கோவை சாய்பாபா காலனி பகுதியில், திறந்தது.

இதனை தொடர்ந்து இக்கிளையின் உரிமையாளர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நாடு முழுவதும், லாட்டி வெல் புட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா பல்வேறு தயாரிப்புகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கோவை சாய்பாபா காலனியில் இக்கிளையை துவக்கியுள்ளதாகவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, உடனுக்குடன் தயார் படுத்த பட்டு வழங்குவதாகவும், முழுக்க முழுக்க பசும் பாலை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்க படுகிறது, இதனால் இதன் சுவை எளிதில் மக்கள் மறக்க முடியாததாக அமைகின்றது என்றார்.

78 வருட காலமாக, இந்த நிறுவனம் ஐஸ்கிரீம் தயாரிகப்புகளை மக்கள் மத்தியில் சந்தை படுத்தியுள்ளது, பான் ஐஸ்கிரீம்’ மற்றும் ராஜ்வாடி குல்ஃபி, ஃபாலூடா முதல் நட்டி பெல்ஜியன் டார்க் சாக்லேட், மோச்சா பிரவுனி ஃபட்ஜ் போன்ற பிரீமியம் சுவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாக தெரிவித்தார்.

மேலும் இக்கிளையில் வாடிக்கையாளர்களுக்கு இலவச வை பை வழங்குவதுடன், பிறந்தநாள், விழாக்களுக்கு சிறப்பான இட வசதிகளையும் வழங்குவதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க