• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரூ.260 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ள முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு – அமைச்சர் சு.முத்துசாமி

July 8, 2023 தண்டோரா குழு

தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் அனைத்து துறை அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் திட்டங்கள் குறித்து அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது:

கோவை மாநகராட்சியில் ரூ.260 கோடி மதிப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ள முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். 561 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. செப்டம்பர் மாத இறுதிக்குள் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 24 மணி நேரம் குடிநீர் திட்டம் ரூ. 646. 71 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. சுமார் 50 சதவீத பணிகள் தற்போது முடிந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் இப்பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோண்டப்படும் சாலைகளை செப்பிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பருவமழை தொடங்கியுள்ளதால் சிறுவாணி அணையில் 10.5 அடி நீர் இருப்பு உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.953 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 75 பணிகளில் 8 பணிகள் கோவை மாநகராட்சி சிறப்பாக செய்ததாக ஒன்றிய அரசு பாராட்டியுள்ளது. மேலும் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஐந்து மாநகராட்சிகள் பங்கேற்றன. இதில் தென்னிந்திய சார்பில் கோவை மாநகராட்சி பங்கேற்று ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை வெகுவாக செய்தமைக்காக பாராட்டு பெற்றுள்ளது.

செம்மொழி பூங்கா 45 ஏக்கர் பரப்பளவில் அமைக்க ரூ.172 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒப்பந்த பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் முதலமைச்சரால் துவங்கப்பட உள்ளது. அவிநாசி சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட சாலைகளை இணைக்க ரூ. 144 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது ஆய்வில் உள்ளது. விரைவில் பணிகளை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.49 கோடி மதிப்பீட்டில் சங்கனூர் பள்ளம் கரைகள் பலப்படுத்தப்பட்டு அப்பகுதியில் சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை குடிசை மாற்று வாரியம் மூலமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. வடவள்ளி, வீரகேரளம் கவுண்டம்பாளையம், துடியலூர் ஆகிய பகுதிகளில் ரூ.730 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.

மேலும் சரவணம்பட்டி, காளப்பட்டி, வெள்ளக்கிணறு, ஒண்டிப்புதூர் பகுதியில் விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
ரூ.15.75 கோடி மதிப்பீட்டில் நகர் நல மையங்கள் 63 இடங்களில் கட்டப்பட்டு வருகிறது. இதில் 45 மையங்கள் தற்போது திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க