• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி பெயரில் தனிப்பட்ட அமைப்பினரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை செல்லுபடி ஆகாது

July 5, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை மற்றும் வியாபார சான்றிதழ் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் வியாபாரிகளின்

இடங்களுக்கே நேரில்வந்து கணக்கெடுப்பு பணி மேற்கொள்வார்கள். எனவே, அனைத்து சாலையோர வியாபாரிகளும் அசல் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களுடன் கணக்கெடுப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும், இனிவரும் காலங்களில் இந்த அடையாள அட்டை வைத்திருக்கும் சாலையோர வியாபாரிகள் மட்டுமே அரசு நலத்திட்டங்கள் பெறவும், மாநகராட்சி பகுதிகளில் வியாபாரம்செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். மாநகராட்சி பெயரில் தனிப்பட்ட அமைப்பினரால் வழங்கப்பட்ட எந்தவித அடையாள அட்டையும் செல்லுபடி ஆகாது. மேலும் விவரங்களுக்கு சாலையோர வியாபாரிகள் மாநகராட்சி

சுகாதாரத்துறை வியாபாரிகள் திட்ட சாலையோர அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளரை தொடர்பு கொள்ளலாம்.மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்கள் தவிர வேறு நபர்கள் அடையாள அட்டை வழங்கினால் கடுமையான சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க