• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

40 அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்று தர ஏற்பாடு – கோவை எஸ். பி பத்ரி நாராயணன் பேட்டி

June 22, 2023

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 1318 பள்ளிகளில் சுமார் 2 லட்சம் மாணவ- மாணவியருக்கு ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டில் இந்த விழிப்புணர்வு மூலமாக 130 குற்றங்கள் தடுக்கப்பட்டது. நடப்பாண்டிலும் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும்
பணி நடக்கிறது.

40 அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்று தர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.‌ப்ரொஜெக்டர் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.‌ கோவை மாவட்டத்தில் மிஷன் ப்ராஜெக்ட் பிரீ திட்டத்தின் மூலமாக மாணவ மாணவிகளுக்கு பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்தில் இருந்து தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மாவட்ட அளவில் 126 கல்லூரிகள் செயல்படுகிறது. இதில் 13 இடங்களில் போதை பொருள் நடமாட்டம் விற்பனை இருப்பதாக தெரிகிறது . இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மாவட்ட அளவில் 226 சிறார் பாலியல் பலாத்கார துன்புறுத்தல் தொடர்பாக போக்சோ வழக்குகள் பதிவானது. நடப்பாண்டில் இதுவரை 88 போக்சோ வழக்குகள் பதிவாகி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க