• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கிராஃப்ட் பஜார் 2023 கைவினை பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி துவக்கம்

June 16, 2023 தண்டோரா குழு

ஜுன் 16-ந் தேதி முதல் 21-ந்தேதி வரை கோவை சுகுணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

கிராப்ட்ஸ் கவுன்சில் ஆப் தமிழ்நாடு 1988 ஆம் ஆண்டு கோவையில் தொடங்கப்பட்டது. இந்திய கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களை ஊக்குவிப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம்.“கிராப்ட் பஜார்” மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள கைவினைத் தொழில் செய்பவர்களுக்கு ஜவுளி மற்றும் கைவினைப் பொருட்கள் தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்தவும் விற்பனை செய்யவும் ஒரு தளத்தை கிராப்ட் பஜார் வழங்குகிறது.

இந்த ஆண்டு அஸ்ஸாம் முதல் கேரளா வரை 100க்கும் மேற்பட்ட விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கலைபொருட்கள் -ஓவியங்கள், கைவினைபொருள் அரங்கு -பித்தளை, கண்ணாடி மற்றும் மரக் கலைப்பொருட்கள், மணிகள், லாக் அண்டு கண்ணாடி வளையல்கள், டோக்ரா, ஜூடிஸ், நாணல் மற்றும் கழிவு துணி பாய்கள், உலர் பூக்கள், பாண்டிச்சேரியில் இருந்து விளக்கு நிழல்கள், உலோகம், டெரகோட்டா, கல்சட்டி, மினியேச்சர் மண்பாண்டங்கள், நீல மண்பாண்டங்கள், உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் துவங்கிய இக்கண்காட்சியை தஸ்கரி ஹாத் சமிதிரூ தில்லி ஹாத் அறக்கட்டளை நிர்வாகி ஜெயா ஜேட்லி அவர்கள் துவக்கி வைத்தார்.இதில் கிராப்பட் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடு கோவை கிளை நிர்வாகிகிள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க