• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வ.உ.சி. உயிரியல் பூங்கா விலங்குகள் விரைவில் இடமாற்றம்

June 16, 2023 தண்டோரா குழு

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு மூடப்பட்டுள்ள நிலையில்,அதில் உள்ள விலங்குகள் வண்டலூர்,கிண்டி, அமராவதி உயிரியல் பூங்காங்களுக்கு விரைவில் இடமாற்றம் செய்யப்பட உள்ளன.

கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது.கடந்த 1965-ம் ஆண்டு இப்பூங்கா உருவாக்கப்பட்டது.ஊர்வன,பறப்பன, பாலூட்டிகள் என 40 இனங்களில் 532 விலங்கினங்கள் வரை உயிரியல் பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நாள்தோறும் 300 முதல் 350 பேர் வார நாட்களிலும், 1500 முதல் 2000 பேர் வரை விடுமுறை நாட்களிலும் வந்து சென்றனர். இதனிடையே, பூங்கா மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக ஒன்றிய சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையின் கீழ் செயல்படும் ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையம் கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது.

இதனால், வ.உ.சி. உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளது.மக்கள் பூங்காவிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.மக்களுக்கு இது மிகுந்த மன வேதனையை அளித்தது. மீண்டும் வ.உ.சி. உயிரியல் பூங்கா திறக்கப்பட வேண்டும் என கோவை மக்களின் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து வ.உ.சி.உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் கூறுகையில்
,

‘‘வ.உ.சி. உயிரியல் பூங்காவை பறவைகள் பூங்காவாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை வண்டலூர், கிண்டி, அமராவதி உள்ளிட்ட பகுதிகளுக்கு இடமாற்றம் செய்வது குறித்து அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்’’ என்றார்.

மேலும் படிக்க