• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜூலை 1ம் தேதி நடிகையும்,பாடகியுமான ஆண்ட்ரியாவின் இசை கச்சேரி !

June 16, 2023 தண்டோரா குழு

தமிழ்,மலையாளம்,தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் நடிகையாகவும்,பாடகியாகவும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ள ஆண்ட்ரியா கோவையில் வரும் ஜூலை 1 ஆம் தேதி லைவ் இன் கான்செர்ட் எனும் மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.ரெட் நூல் யூ டியூப் சேனல் வழங்கும் இந்த லைவ் இன் கான்செர்ட் கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோசோன் மாலில் நடைபெற்றது. இதில் பிரபல நடிகையும் பாடகியுமான நடிகை ஆன்ட்ரியா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

கோலாலம்பூரில் கடைசியாக இசைக்கச்சேரி நடத்தியதாகவும்,கோவையில் வரும் 1ம் தேதி 2 மணி நேரம் இசை நிகழ்ச்சயை நடத்த உள்ளதாக கூறிய அவர், இளையராஜா பாடல்களும்,நான் பாடிய பாடல்களும் இந்த கச்சேரியில் பாட உள்ளதாக கூறினார்.கோவை எனக்கு மிகவும் பிடித்த ஊர்.கோவையில் நல்ல ரசிகர்களை எதிர்பார்த்து இந்த கச்சேரியை நடத்த உள்ளதாகவும், கோவை ரசிகர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி மாபெரும் இன்னிசை விருந்து காத்திருப்பதாக அவர் கூறினார்.

இந்த இசைக்கச்சேரிக்கு ரூ.250, 500, 1000 மற்றும் ரூ.1500 என்று டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகள் புக் மை ஷோ மற்றும் பேடிஎம்-இல் கிடைக்கும் என்பது குறிப்படதக்கது.

மேலும் படிக்க