• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

#WE STAND with ANNAN VSB” கோவையில் திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்கள்!

June 16, 2023 தண்டோரா குழு

மதுவிலக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் கைது செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தான் கடந்த மூன்று தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது.

இந்நிலையில் கோவை மாநகரில் காந்திபுரம்,சிவானந்த காலனி, ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் திமுகவினர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

சிவானந்த காலனி பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் “திமுக காரனை சீண்டி பாக்காதீங்க- இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை…” என்ற போஸ்டரும்
அதேபோல் கோவை மாநகர கிழக்கு மாவட்ட ex மாணவரணி அமைப்பாளர் மனோஜ் குமார் ஒட்டியுள்ள மற்றொரு போஸ்டரில்
#WE STAND with ANNAN VSB” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், கலைஞர் கருணாநிதி கூறிய “எங்கள யாரும் அடிக்க முடியாது- நான் திருப்பி அடிச்சா உங்களால தாங்க முடியாது” என ஒன்றிய அரசை குறிப்பிட்டுள்ளது.

மேலும் படிக்க