• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆடுகளை கடித்துக் கொன்ற தெருநாய்கள் – விவசாயி வேதனை!!!

June 3, 2023 தண்டோரா குழு

கோவை,சின்னியம்பாளையம், வெங்கடாபுரம், பெருமாள் கோவில் வீதி பகுதியில் சேர்ந்த விவசாயி கணேஷ்குமார். இவர் அப்பகுதியில் 50 ஆண்டுக்கு மேல் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறது.இவர் தோட்டத்தில் தென்னை, வாழை விவசாயம் செய்து வருகிறார்.

மேலும் ஆடு,மாடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், அதில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தோட்டத்திற்குள் புகுந்த 10 க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பத்து ஆடுகளைக் கொன்று உள்ளது. ஏற்கனவே அப்பகுதியில் நடந்து சென்ற குழந்தையை தெரு நாய்கள் கடித்து உள்ளதாகவும்,அப்பகுதி பொதுமக்கள் அங்கு வந்து சாலையில் மீன்,ஆடு, கோழி கழிவுகளை கொட்டி செல்வதால் அங்கு நாய்களின் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிந்து வருகிறது.

இது குறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காததால், இது போன்ற சம்பவங்கள் அடிகடி நடைபெற்று வருவதாக வேதனையுடன் தெரிவிக்கும் விவசாயி. மேலும் அப்பகுதிக்கு வரும் நாய்கள் அவ்வழியாக செல்லும் நபர்களை கடித்து வருவதால் அந்த சாலையை பயன்படுத்தும் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்த்து இதுகுறித்து புகார் மனு கொடுக்குமாறும் மேலும் இதற்கு நடவடிக்கை எடுப்பதாக விவசாய இடம் கூறிச் சென்றுள்ளனர். மேலும் அந்த விவசாயி தோட்டத்து வீட்டில் பொறுத்தி இருந்து சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் ஆடுகளை கடித்துச் சென்ற நாய்கள் நடமாட்டம் தெரிகின்றது.

குழந்தைகள் படிக்கும் பள்ளி அருகே நடந்த இந்த சம்பவம் மேலும் அங்கு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி பெற்றோர் கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க