• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச யோக போட்டி- தங்கம் பதக்கம் வென்று கோவை மாணவ மாணவிகள் சாதனை

June 2, 2023 தண்டோரா குழு

கம்போடியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டியில் தங்க பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவ மாணவிகளுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட யோகா போட்டியாளர்களுக்கு சர்வதேச அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி கம்போடியா நாட்டில் உள்ள சியாம் ரீப் நகரில் நடைபெற்றது.

கடந்த 27 ந் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா,அர்ஜெண்டினா, தாய்லாந்து, கம்போடியா,மெக்சிகோ, கனடா, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலர் பங்கேற்றனர்.சப் ஜூனியர்,ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில், ஆர்ட்டிஸ்டிக், ரிதமிக், அத்லெட்,உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. மயூர் ஆசனம்,திருவிக்கிரமா ஆசனம், சிரசாசனம்,சக்ராசனம்,என பல்வேறு ஆசனங்கள் கொண்டு யோகா போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் கோவையை சேர்ந்த யோவா யோகா அகாடமியின் தலைமை பயிற்சியாளரும்,பிரபல யோகா உலக சாதனை மாணவி வைஷ்ணவியிடம் பயிற்சி பெற்ற ஆறு மாணவ, மாணவிகள் உட்பட ஏழு பேர் முதல் பரிசாக தங்கப்பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.கம்போடியா நாட்டில் யோகா போட்டியில் வென்று கோவை விமான நிலையம் திரும்பிய மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சர்வதேச அளவில் யோகா போட்டியில் சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த மாணவ மாணவிகளுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க