• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பார்சல்களுக்கு மஞ்சள் பை கொண்டு வர வெறுப்பு காட்டும் மக்கள் அவதியுறும் தள்ளு வண்டி உணவு கடைகள்

June 1, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலையோர தள்ளு வண்டி உணவு கடைகள் உள்ளன.இந்த கடைகளில் அன்றாடம் கூலி வேலைக்கும் செல்லுபவர்கள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் என ஏழை எளிய மக்கள் உணவு உட்கொள்ளுகிறார்கள். தள்ளு வண்டி கடைகளில் இட்லி, தோசை போன்றவற்றின் விலை குறைவு காரணமாக அதிக அளவில் மிடில் கிளாஸ் குடும்பத்தார் இங்கு உணவு உட்கொள்ளுவார்கள்.

உணவுப்பொருட்களின் மூலப்பொருள் விலை உயர்வு, கூலி உயர்வு போன்றவற்றால் தள்ளு வண்டி கடைகளில் இட்லி, தோசை உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.இதன் காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பார்சல்களுக்கு பிளாஸ்டிக் கவர்கள் தடை காரணமாக வருவாயில் 30 சதவீதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட சாலையோர மற்றும் நடைபாதை வியாபாரிகள் நலச்சங்கம் தலைவர் மணி கூறியதாவது:

கொரோனா ஊரடங்கு காரணமாக ஏற்கனவே தொழில் பாதித்து தள்ளு வண்டி உணவு கடைகள் மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றன.இதுதவிர சமையல் எண்ணெய் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு , கூலி உயர்வு என தொழில்களை முடக்கும் வகையில் விலை உயர்வுகள் உள்ளன. பலர் தள்ளு வண்டி கடைகளை மூடிச்சென்று விட்டனர்.

இந்நிலையில் பார்சல்களுக்கு பிளாஸ்டிக் கவர்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் அதற்கு மாற்றாக மஞ்சள் பைகளை உபயோகப்படுத்த அறுவுறுத்தப்பட்டுள்ளது. சட்னி, சாம்பார் போன்றவற்றை பார்சல் செய்ய பாயில் பேப்பர் வகை உபயோகம் செய்யப்படுகின்றன.

இதனிடையே மக்கள் மஞ்சள் பைகளை கொண்டு வந்து பார்சல்களை வாங்கி செல்ல வெறுப்பு காட்டுகின்றனர்.நாங்கள் மஞ்சள் பைகளை கொடுத்தாலும் வாங்குவது இல்லை. வெள்ளை துணி பைகளை கூடுதல் விலை பெற்று கொண்டு பார்சல் தந்தால் கோபம் கொள்கிறார்கள்.பிளாஸ்டிக்கு மாற்றாக மாற்றுப்பொருள்களை அரசே மானிய விலை தர வேண்டும். உணவு பொருட்களின் விலைகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தள்ளு வண்டி தொழில் மூடு விழா செல்லும் நிலை மாற எங்களது இந்த கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க