• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வித்தியாசமான பழி வாங்கும் கதை தான் ரெஜினா படம் – கோவையில் நடிகை சுனைனா பேட்டி !

May 31, 2023 தண்டோரா குழு

கோவை சரவணம்பட்டி தனியார் மாலில் ‘ரெஜினா’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

பன்மொழிகளில் உருவாகும் ‘ரெஜினா’ முதன்மை நடிகையாக சுனைனா நடக்கிறார். இப்படத்தை எல்லோ பியர் புரொடக் ஷன் நிறுவனத்தின் சார்பில்,கோவையை சேர்ந்த சதீஷ் நாயர் தயாரித்துள்ளார்.இவரே தான் இப்படத்திற்கு இசை அமைத்து உள்ளார்.

இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா புரோசோன் மாலில் நடந்தது.நிகழ்ச்சியில் இயக்குனர் டாமின் டி சில்வா,நடிகை சுனைனா, இசையமைப்பாளர் சதீஷ் நாயர்,கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன்,ஸ்ரீ கிருஷ்ணா ஸ்சுவீட் சேர்மன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

முன்னதாக பேசிய நடிகை சுனைனா,

ரெஜினா படத்தின் கதை பொறுத்தவரை அசம்பாவிதம் தொடர்பாக திடீர் என ஒரு சம்பவம் நடை பெறும் அதை வைத்து படத்தை நகர்த்தி உள்ளார்கள்.இது ஒரு வித்தியாசமான பழி வாங்கும் கதை.நான் ஒரு வீட்டுப் பெண்ணாக நடித்துள்ளேன் எனவும் நல்ல கதை நன்றாக ஓடுகிறது.2 மாதம் தொடர்ந்து நடித்து உள்ளேன். இதனால் மகிழ்ச்சியாக உள்ளேன். ஒவ்வொரு கதை ஒவ்வொரு மாதிரி இருக்கும்
இந்த கதை எனக்கு பிடித்து இருந்தது என்றார்.

மேலும் பொதுவாக நிஜ வாழ்க்கையில் இந்த பெண் இது செய்தது அது செய்தது என கூறுவார்கள்.மனிதர்களின் வாழ்க்கையில் பெரும்பாலானவர்கள் நகைச்சுவை, சென்டிமென்ட் என இருந்தாலும் ஒரு சிலர் அதைத்தாண்டி விசித்திரமாக நடந்து கொள்வார்கள்.அவர்கள் வாழ்க்கையில் ஏதேனும் கடினமான சம்பவங்கள் நடந்திருந்தால் அதன் அடிப்படையில் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள்.அப்படிப்பட்டவர்களை மையப்படுத்தி தான் இந்தப் படம் உருவாகியுள்ளது”.

எல்லா இயக்குனருக்கும் கேரக்டர் ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள். சினிமா வரும்போது எனக்கு வயது 15 அதன் பிறகு வரும் கேரக்டர் எனக்கு நல்ல வளர்ச்சியை கொடுத்து வருகிறது என்ன தெரிவித்தார்.

இயக்குனர் கூறும்போது, கேரளா ஸ்டோரியை பொறுத்தவரை அனைவருக்கும் படம் எடுக்க சுதந்திரம் உள்ளது. ரெஜினா படம் வந்துள்ளது என்றார்.

மேலும் படிக்க