கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் குடிநீர் திட்டம்-2ல் வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல் ராமகிருஷ்ணாபுரம் மேல்நிலை குடிநீர் தொட்டி வரை உள்ள குடிநீர் கொண்டு வரும் பிரதான குழாயில் முத்துக்கல்லூர் என்ற இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணி நாளை (செவ்வாய்) நடைபெற உள்ளது.
எனவே, அன்றையதினம், பில்லூர் திட்டம்-2ன் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படும் சிங்காநல்லூர்,ஒண்டிப்புதூர், பீளமேடு, சவுரிபாளையம், கணபதி, காந்திபுரம், புலியகுளம்,ரத்தினபுரி, சித்தாபுதூர் மற்றும் உக்கடம் பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே,பொதுமக்கள், சிரமத்தினை பொருத்துக்கொண்டு, மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி வேண்டுகிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு