• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண் பல்கலைக்கழக மாணவர் சிவில் சர்வீஸ் தேர்வில் மாநில அளவில் 3ம் இடம்

May 26, 2023 தண்டோரா குழு

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் கோவை வேளாண பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவர் சுபாஷ் கார்த்திக் (23) முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-ம் இடத்தையும், தேசிய அளவில் 118-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்து உள்ளார். இவர் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘

கோவை வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி. அக்ரி படித்தேன். தொடர்ந்து இங்கேயே முதுகலை படிப்பு படித்து வருகிறேன். எனது தந்தை சங்கரன் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணி புரிகிறார். அக்கா பூர்ணிமா ஐ.டி. ஊழியராக உள்ளார். நான் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஒரு நாள் படிக்கும் காலத்தில் கலந்து கொண்டேன். அப்போது விவசாயிகள் விவசாயம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் குறித்து எடுத்து கூறினர்.

அதை கேட்டதும், ஐ.ஏ.எஸ். படித்து விட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதையடுத்து ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகினேன். ஆன்லைன் வகுப்பு மூலம் பயிற்சி பெற்றேன். முதல் முயற்சிலேயே வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது,’’ என்றார்.

மேலும் படிக்க