• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஜுபிடர் சார்பில் 326வது நாள் பசிப்பிணி போக்கும் நிகழ்வு

May 22, 2023 தண்டோரா குழு

லன்யஸ் கிளப் இன்டர்நேஷனல் மாவட்டம் 324 டி, லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் ஜுபிடர் சார்பில் கோவை மாதம்பட்டி மத்திப்பாளையம் பகுதியில் உள்ள கோவை மாவட்ட வெல்ஃபேர் அசோசியேஷன் முதியவர் காப்பகத்தில் பசிப்பிணி போக்கும் திட்டத்தின் 326வது நாளில் அரிமா கே வி ஷா மற்றும் ராகினி கே.ஷா ஆகியோரின் 42 வது திருமண நாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஸ்பான்சர் ஸ்ரீ ஹர்ஷித் கே ஷா செய்திருந்தார்.

நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆளுநர் அரிமா ஜான் பீட்டர் கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராக இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் அரிமா தினகரன், லயன்ஸ் கிளப் ஆப் கோயம்புத்தூர் கே ஆர் புரம் செயலாளர் அரிமா சுபா என் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு அரிமா கே ஷா மற்றும் ராகினி கே ஷா ஆகியோரின் 42 வது திருமண நாளில் வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடினர்.

தொடர்ந்து, 326வது நாளில் பசிப்பிணி போக்கும் திட்டத்தில் முதியவர் காப்பக இல்லத்தில் 30க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் முரளி, சீஜா முரளி, தாரணி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரிமா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க