• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டங்கள் – ஆட்சியர் தகவல்

May 22, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விகடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சிமற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கானசான்று,ஆதார் அட்டை, வருமானசான்று,ரேஷன் அட்டை அல்லது இருப்பிடச் சான்று,கடன் பெறும் தொழில் குறித்தவிவரம், திட்ட அறிக்கை,ஓட்டுநர் உரிமம் மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆணவங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண் 0422 -2300404ல் விவரம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க