• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசியல் பிரவேசம் எப்போது? – தீபா பேட்டி

January 17, 2017 தண்டோரா குழு

“அரசியல் பயணம் குறித்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளன்று அறிவிப்பேன்” என அவரது சகோதரர் மகள் தீபா அறிவித்துள்ளார்.

எம்ஜிஆரின் நூற்றண்டு விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணிக்கு தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

தன்னைச் சந்திக்க வரும் தொண்டர்களிடம் எம்ஜிஆர் பிறந்த நாளன்று முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தீபா தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இன்று புதிய பயணத்தைத் தொடங்கவுள்ளேன். ஜெயலலிதாவின் வழி நடந்து மக்கள் பணியை மேற்கொள்ள உள்ளேன். தமிழகத்தை ஆசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்ற நற்பணிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழகம், தமிழ் மக்களுக்காக இனி தொடர்ந்து பாடுபடுவேன்.

ஜெயலலிதா பிறந்த நாளன்று அரசியலில் ஈடுபடுவது குறித்து அறிவிப்பேன். எனது அரசியல் திட்டங்களை அறிவிக்க ஜெயலலிதாவின் பிறந்த நாளைத் தவிர வேறு பொருத்தமான நாள் இல்லை. இளைஞர்கள், தொண்டர்களின் கருத்தை அறிந்து அரசியல் பயணம் குறித்து அறிவிப்பேன்.
இவ்வாறு தீபா கூறினார்.

மேலும் படிக்க