• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்பாரம்பரிய கலைகளை மீட்கும் விதமாக கோவையில் நடைபெற்ற மாபெரும் சிலம்பம் போட்டி

May 22, 2023 தண்டோரா குழு

கோவையில் இந்திய சிலம்பம் சங்கம் சார்பாக நான்காவது தேசிய அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள டான் போஸ்கோ பள்ளி அரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியை சிலம்பம் அசோசியேஷன் ஆப் இந்தியா தலைவர் முகம்மது சிராஜ் அன்சாரி துவக்கி வைத்தார்.செயலாளர் தியாகு நாகராஜ் முன்னிலை வகித்தார்.தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் ஆந்திரா,தெலுங்கானா, கர்நாடகா,கேரளா,மகாராஷ்டிரா உத்தரபிரதேசம், தமிழ்நாடு என நாடு முழுவதும் இருந்து 1000 த்திற்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

சிலம்பம் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு,நடுக்கம்பு வீச்சு,மான் கொம்பு,வேல் கம்பு, இரட்டைக் கம்பு,சுருள் வாள், தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டன.ஜூனியர்,சப் ஜூனியர்,சீனியர்,சூப்பர் சீனியர் என நான்கு பிரிவுகளாக ஒவ்வொருவரின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடைபெற்றது.

இந்த போட்டியில் 5 வயது முதல் ஐம்பது வரையிலான போட்டியாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்,இந்திய சிலம்ப சங்கம் தமிழ்நாடு தலைவர் பாலமுருகன் செயலாளர் அர்ஜூன் தொழில்நுட்ப இயக்குனர் பாக்கியராஜ் துணை தலைவர் எம் ராஜா ஆந்திர பிரதேசம் தலைவர் கிறிஸ்டோபர் உத்தர பிரதேச மாநில செயலாளர் மிராஜ் அன்சாரி தெலுங்கானா தலைவர் நரசிங்க ரெட்டி கேரள மாநில செயலாளர் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் வெற்றி பெற்ற மாணவ,
மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கங்கள், கோப்பைகள் வழங்கப்பட்டது.

இதில் தேர்வு செய்யப்படும் வெற்றியாளர்கள் அடுத்து மலேசியாவில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க