• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக செவிலியர்கள் தினம்-ஊமை நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய சேரன் செவிலியர் கல்லூரி மாணவிகள்.

May 12, 2023 தண்டோரா குழு

உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கோவையில் சேரன் செவிலியர் கல்லூரி மாணவிகள் ஊமை நாடக நடனம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

மருத்துவமனையில் மருத்துவர்களை விட செவிலியர்கள் பங்கு என்பது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.அதே போல சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் பாதுகாவலராகவும் செவிலியர்கள் திகழ்கின்றனர்.இத்தகைய செவிலியர்கள் தினம் ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றனர்.

அதன்படி கோவையை சேர்ந்த சேரன் செவிலியர் கல்லூரி மாணவிகள்,கல்லூரி முதல்வர் மீனாகுமாரி தலைமையில் மக்கள் அதிகமாக கூடும் இடமான உக்கடம் பெரியகுளத்தில் செவிலியர் தினத்தை கொண்டாடினர்.இதில் மக்கள் நோய் வராமல் தங்களை பாதுகாப்பது குறித்த பதாகைகள் கொண்டு ஊமை நாடக நடனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க