கோவையில் மாம்பழம், சாத்துக்குடி என ரசாயனத்தை கொண்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில், கோவை மாநகரில் உள்ள வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, பவள வீதி-1, பவள வீதி-II, கருப்பன கவுண்டர் வீதி, முத்து விநாயகர் கோவில் வீதி, தர்மராஜா கோவில் வீதி, கெம்பட்டி காலனி வீதி ஆகிய பகுதிகளில் எட்டு குழுவாக திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த திடீர் கள ஆய்வின் போது 45 கடைகள் மற்றும் குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 16 கடை மற்றும் குடோன்களில் சிறிய இரசாயன பொட்டலங்களை ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர்.இதைத் தொடர்ந்து அதிகாரிகள் 22,500 கிலோ பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் மற்றும் 2.500 கிலோ சாத்துகுடி என மொத்தம் 25 ஆயிரம் கிலோ மாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு சுமார் 12 லட்சத்து 56 ஆயிரத்து 400 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து 16 கடைகள் மற்றும் குடோன்களுக்கு உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு