• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆட்சியர் தலைமையில் 250 அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு

May 6, 2023 தண்டோரா குழு

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பள்ளிக் கல்வித்துறை மற்றும் முன்னோடி வங்கியின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் மற்றும் கல்விக் கடன் பெறுதல், வழிகாட்டுதல் குறித்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ஆட்சியர் தெரிவித்ததாவது:

இளைஞர்களை படிப்பில்‌ மட்டுமல்லாது அனைத்து நிலைகளிலும்‌ வெற்றியாளர்களாக திகழச்செய்யும்‌ வகையில்‌ திறன்‌ மேம்பாடு மற்றும்‌ வழிகாட்டுதல்‌ திட்டமாக “நான்‌ முதல்வன்‌” திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்களை கல்வி, சிந்தனை, மொழி ஆற்றல்‌ மற்றும்‌ பன்முகத்‌ திறமையினை மேம்படச்‌ செய்வதே நான்‌ முதல்வன்‌ திட்டத்தின்‌ முக்கிய நோக்கமாகும்‌.

கோவை மாவட்டத்தில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. சமூகத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படவேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்து என்ன படிக்கவேண்டும், எங்கு படிக்கவேண்டும், அதற்கான திறமைகள் மேம்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு இந்த திட்டத்தின் வாயிலாக வழங்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதால் அவர்கள் எதிர்காலத்தில் தங்களின் திறமைகளை மேம்படுத்தி சரியான துறையில் முன்னேற்றமடைய வாய்ப்பாக அமையும். இதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். மாணவர்களின் வருங்காலம் சிறப்பாக அமையும்.

இந்த பயிற்சி வகுப்பினை தலைமை ஆசிரியர்கள் சிறப்பாக பயன்படுத்தி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கோவை மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) பாண்டியராஜன், முன்னாள் முன்னோடி வங்கி மேலாளர் வணங்காமுடி, நிர்மலா கல்லூரி முதல்வர் ஜி.எஸ்.மேரி பாபிலோ இ அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த 250 பள்ளி தலைமை ஆசிரிரியர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க