• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்

May 5, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் ஒண்டிப்புதூர், சக்தி நகர் மற்றும் குமுதம் நகர் பகுதிகளில் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் 1.96 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதே போல், 56வது வார்டு பகுதியில் ரூ.29.10 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணி நடைபெற்று வருகிறது. விளாங்குறிச்சி பகுதியில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனைத்தொடர்ந்து சிங்காநல்லூரில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், உள் மற்றும் புற நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், அறுவைசிகிச்சை மையம், மருந்து மாத்திரைகளின் இருப்புகள் மற்றும் பதிவேடுகளை மாநகராட்சி கமிஷனர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அவர் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளிடம் கனிவாக பேசி தரமான சிகிச்சை அளித்திட மருத்துவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தினார்.

மேலும், மருத்துவமனையில் ரூ.68.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை பார்வையிட்டு பணியினை விரைவில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர உத்தரவிட்டார். பின்னர், டாடாபாத் பகுதியில் உள்ள மாநகராட்சி அறிவியல் பூங்காவில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க