• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘குழந்தைகள் அனைவரும் கல்வி கற்கவேண்டும் – ஆட்சியர் வேண்டுகோள்

May 2, 2023 தண்டோரா குழு

மே தினத்தினை முன்னிட்டு கோவை தொண்டாமுத்தூர் வட்டாரம் இக்கரைபோளுவாம்பட்டி முள்ளாங்காடு சமுதாய நலக்கூடத்தில் கிராமசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கிராமசபை கூட்டத்தில் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார்.

இக்கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்ததாவது:

இந்த கிராம அழகானதாக உள்ளது. தூய்மை பாரத இயக்கம், நம்ம ஊரு சூப்பரு போன்ற திட்டங்களில் இந்த கிராம முன்னோடியாக விளங்கி வருகிறது. நொய்யல் ஆறு இந்த பகுதியில்தான் உருவாகிறது. இயற்கை அழகை பாதுகாக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து தூய்மை காவலர்களிடம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் நீர்நிலைகள் மற்றும் சுற்றுசூழலும் பாதுகாப்படும். கழிவறைகளை பயன்படுத்த வேண்டும்.

சுயஉதவிக்குழுக்கள் மூலம் இந்த பகுதியில் சிறப்பு பெற்ற பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுய உதவிக்குழுக்களுக்கும் திறன் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதனை சிறப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். மதுக்கரை ஊராட்சி ஒன்றியம், பிச்சனூர் ஊராட்சி சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் அனைத்து கிராமங்களும் இதுபோன்ற பல்வேறு சிறந்த ஊராட்சிக்கான விருதினை பெற நடவடிக்கை மேற்கொள்வோம். பொதுமக்களும் இதற்கு உறுதிணையாக இருக்கவேண்டும்.

குழந்தைகள் அனைவரும் கல்வி கற்கவேண்டும். குழந்தை திருமணத்தை தவிர்க்கவேண்டும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருக்ககூடாது. இதற்கு இந்த ஊர் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் இடமாக நம் மாவட்டம் திகழ்கின்றது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க