• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐசிஐசிஐ வங்கி சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகளை இந்திய ரூபாயில் விரைவாகத் தீர்க்கிறது

April 28, 2023 தண்டோரா குழு

இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், இந்திய ரூபாயில் ஏற்றுமதி – இறக்குமதி பரிவர்த்தனைகளை செலுத்தவும் நிறைவு செய்யவும் உதவும் வகையில் ருப்பீ வோஸ்ட்ரோ கணக்கை வழங்குவதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.

இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளின் விலைப்பட்டியல், பணம் செலுத்துதல் மற்றும் நிறைவு செய்தல் ஆகியவற்றிற்கு ரூபாயைப் பயன்படுத்தலாம் என்பதால், அவர்கள் சுமக்கும் வெளிநாட்டு நாணய அபாயத்தை இந்த முன்மொழிவு குறைக்கிறது.

ஐசிஐசிஐ வங்கியின் லார்ஜ் க்ளையன்ட்ஸ் குரூப் தலைவர் சுமித் சங்காய் பேசுகையில்,

“ரூபாயில் வெளிநாட்டு வர்த்தகத்தை அதிகரிக்க இந்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்கு ஏற்ப, ஐசிஐசிஐ வங்கி, இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகளை ஐNசு இல் தீர்த்துக்கொள்ள ருப்பீ வோஸ்ட்ரோ கணக்கை வழங்குகிறது.ஐசிஐசிஐ வங்கி 29 நாடுகளில் உள்ள வங்கிகளின் 100 க்கும் அதிகமான, ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளின் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.

இந்த நாடுகள் இந்தியாவின் பெரும்பாலான ஏற்றுமதி – இறக்குமதி வழித்தடங்களை உள்ளடக்கியிருப்பதால்,இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக இந்தியன் ரூபாய் இல் தீர்த்துக்கொள்ள முடியும், மேலும் இந்திய சர்வதேச வர்த்தகத்தின் வளர்ச்சியை மேம்படுத்தவும், இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதி-இறக்குமதி மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கிறது.

எங்களின் முன்முயற்சியானது நமது ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களால் சுமக்கப்படும் வெளிநாட்டு நாணய மாற்று அபாயத்தைக் குறைக்கும் மற்றும் சர்வதேச வர்த்தக முடித்தல்களை விரைவுபடுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று கூறினார்.

மேலும் படிக்க