• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பி எஸ் ஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு கல்லீரல் சிகிச்சை பிரிவு

April 24, 2023 தண்டோரா குழு

1. கல்லீரல் நோய் பிறந்த குழந்தைகள் முதல் 18 வயது உள்ளவர்களுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெரியவர்களுக்கு மட்டும் வரும் நோய் அல்ல இது.

2. கல்லீரல் சம்பந்தமான நோய்கள் மற்றும் பாதிப்பினை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் 90% குணமடையலாம்.

3. நீண்ட நாட்களாக கல்லீரலில் ஏற்படும் பாதிப்பிற்கு அதற்குரிய சிகிச்சை பெற்றால் நோயை கட்டுப்படுத்தலாம்.

4. கல்லீரல் நோய்க்கான அறிகுறிகள்:
• பசியின்மை
• மஞ்சள்காமாலை
• உடல்முழுவதும் அரிப்பு
• உடல்சோர்வு
• வளர்ச்சியின்மை
• கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம்.
• இரத்த வாந்தி
• கருப்பு/பழுப்பு நிறத்தில் மலம் கழிப்பது
• நினைவாற்றல் குறைபாடு

5 .தற்போது பி எஸ் ஜி மருத்துவமனையில் குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமான கல்லீரல் நோய் சிகிச்சை பிரிவு உள்ளது. குழந்தைகளுக்கான சிறப்பு கல்லீரல் சிகிச்சை நிபுணருடன் கூடிய மருத்துவர் குழுவினர் மற்றும் அதி நவீன வசதிகளுடன், குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

6. குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சைக்கான வசதியும் உள்ளது

குழந்தைகளுக்கான கல்லீரல் சிறப்பு சிகிச்சை பிரிவின் சிறப்பம்சங்கள்:

கல்லீரல் நிபுணர் மருத்துவ ஆலோசனை
கல்லீரல் நோய்க்கான மரபணு வளர்சிதைமாற்றம் கண்டறியும் பரிசோதனை
MRCP பரிசோதனை
கல்லீரலுக்கான ஸ்கேன் பரிசோதனை (Fibroscan / Elastography Scan)
கல்லீரல் திசு பரிசோதனை
குழந்தைகளுக்கான தீவிர கல்லீரல் சிகிச்சைப்பிரிவு
குழந்தைகளுக்கான கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை
(அரசு அங்கீகாரம் பெற்றது)
பிறந்த குழந்தைகள் முதல் 18 வயதுவரை உள்ளவர்களுக்கான சிறப்பு எண்டோஸ்கோப்பி பரிசோதனை மையம்
கல்லீரல் நோய்க்கான உணவு ஆலோசனை

மேலும் படிக்க