• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேலை நேரம் 12 மணி நேரமாக நீட்டிப்பு – சைமா வரவேற்பு

April 24, 2023 தண்டோரா குழு

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவி சாம் வெளியீட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு தொழிற்சாலைகள் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தங்களை வரவேற்கிறோம். இது வேலை நேரத்தில் ஒரு நெகிழ்வுத்தன்மையை கொண்டு வரும். வேலை நேரம் தொடர்பான திருத்தம் விருப்பமுள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது வரவேற்க்கதக்க அம்சமாகும். தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்துள்ள தமிழகத்தில், தொழிலாளர் பற்றாக்குறையை போக்க வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக தொழில்துறையினர் வலியுறுத்தி வந்த நிலையில், தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று, இத்தருணத்தில் அரசு கொண்டு வந்துள்ள மாற்றம் தொழில்துறையினருக்கு உதவிகரமாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள ஜவுளி ஆலைகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இத்தொழிலாளர்கள் அதிக நேரம் வேலை செய்ய தயாராக உள்ளனர். இந்த திருத்தத்தின் மூலம், இந்த தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்து அதிக வருமானம் ஈட்டுவார்கள். அரசிடமிருந்து அனுமதி பெறப்பட்ட பின்னரே இந்த திருத்தங்கள் தொழில் நிறுவனங்களில் நடைமுறைக்கு வரும்.இந்த திருத்தத்தின் மூலம் மாநிலத்தில் முதலீடு அதிகரிக்கும். வேலைவாய்ப்பு, தொழில்துறை உற்பத்தி போன்றவறில் தமிழகம் மேலும் வலுப்பெறும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க