• Download mobile app
07 Jan 2026, WednesdayEdition - 3619
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முன்னாள் அமைச்சரை யாரோ இயக்குகிறார்கள் – அமைச்சர் ஓ.எஸ். மணியன்

January 16, 2017 தண்டோரா குழு

“முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியை யாரோ இயக்குகிறார்கள்: அவர் விலை போய்விட்டாரோ என்ற சந்தேகம் வந்துள்ளது“ என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் புகார் கூறினார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

அதிமுக வளர வேண்டும் என்பவர்கள் அனைவரும் கருத்து சொல்லலாம். எம்.ஜி,ஆரின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் முக்கிய பங்கு வகித்தவர் திவாகரன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பக்கப்பலமாக இருந்தவர் திவாகரனும் அவரது குழுவினரும்தான். எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் அதிமுக அணி இரண்டுபட்டபோது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக திவாகரன் இருந்தார்.

அதைப் போல், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரைக் காப்பாற்ற சசிகலாவின் உறவினர்கள் பலரும் உதவினார்கள். மேலும், கே.பி. முனுசாமி கட்சி தாவ முடிவெடுத்து விட்டார் என்பது அவரது பேச்சின் மூலமாகத் தெரிகிறது. அவர் விலை போய்விட்டாரோ என்று தோன்றுகிறது. அவரை யாரோ பின்னால் இருந்து இயக்குகிறார்கள் என்று கூட சொல்லலாம்” என்றார் ஒய்.எஸ்.மணியன் கூறினார்.

முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி சில தினங்களுக்கு முன், அதிமுகவை ஒரு குடும்பம் கைப்பற்ற முயல்வதாகவும், கட்சியில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாதவர்கள் கட்சியைக் கைப்பற்றத் துடிப்பதாகவும் புகார் கூறியுள்ளார்.

மேலும் படிக்க