கோவையில் மனித நேய நண்பர்கள் குழு சார்பாக நடைபெற்ற மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அனைத்து சமய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கோவையில் செயல்பட்டு வரும் மனிதநேய நண்பர்கள் குழு சார்பாக பல்வேறு சமுதாயம் சார்ந்த நலத்திட்ட பணிகளை பல்வேறு சமுதாய நண்பர்கள் இணைந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாத இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கோவை உக்கடம் பகுதியில் நடைபெற்றது.
மனித நேய நண்பர்கள் குழுவினர் ஒருங்கிணைத்த இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறை மாநில செயலாளர் இமயம் ரஹ்மத்துல்லா தலைமை தாங்கினார்.மனித நேய நண்பர்கள் குழுவின் நிர்வாகிகள் சாகுல்,சிக்கந்தர் பாட்ஷா,சாபு,மொய்தீன். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடைபெற்ற இதில்,சிறப்பு அழைப்பாளர்களாக கோவை ஆதீனம் முருகன் அடிமை,கோவை மாவட்ட சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பின் பொது செயலாளர் இனாயத்துல்லா,கோவை புனித மைக்கேல் ஆலய ஆயர் வி.ஜி.ஃபாதர் ,தி.மு.க.மாவட்ட துணை செயலாளர் கோட்டை அப்பாஸ்,காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொது செயலாளர் கோட்டை செல்லப்பா மற்றும் கோட்டை அக்கீம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில்,மாணவர் காங்கிரஸ் சண்முகம்,சம்சுதீன்,குறிச்சி கனி, ஷாஜஹான்,நசீமுல்லா, நஜ்முதீன்,ரபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்