நடைபாதையில் சிறியளவில் கடை போட அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்த திராவிட சாலையோர நடைபாதை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினர்.
கோவை காந்திபுரம் 8 ஆவது வீதி சீனிவாச புரத்தில் மார்கெட் செயல்பட்டு வருகிறது. மார்க்கெட் நடைபாதை ஓரமாக , போக்குவரத்துக்கும்,பொதுமக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் 20 க்கும் மேற்பட்டவர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர்.40 நாட்களுக்கு முன்பு கமர்சியல் கோர்ட் வருவதால் எட்டு நாட்களுக்கு மட்டும் நடைபாதையில் வியாபாரம் செய்ய வேண்டாம் என அதிகாரிகள் கேட்டனர். அதன்பேரில் நாங்கள் கடை போடவில்லை.
இதனையடுத்து மீண்டும் கடை போட கேட்ட போது,மாநகராட்சி நிர்வாகமும், காவல் துறையும் அனுமதி அளிக்கவில்லை. மூன்று முறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடந்த 45 ஆண்டுகளாக நடைபாதையில் சிறு வியாபாரம் செய்து வருகிறோம். கடை நடத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்