• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பல்சமய இயக்கத்தின் மதநல்லிணக்க இப்தார் விழா! மஜக துணை பொதுச்செயலாளர் வாழ்த்து!

April 15, 2023 தண்டோரா குழு

கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக ஹாஷ் 6, நட்சத்திர ஹோட்டலில் “மத நல்லிணக்க நோன்பு துறப்பு (இப்தார்) நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வில் இஸ்லாமிய மத பெரியோர்கள், இந்து மத மாடாதிபதிகள், கிருஸ்துவ பாதிரியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கோவையின் வியாபார முக்கியஸ்தர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இஸ்லாமியர்களின் நோன்பு குறித்து இந்து மத மாடதிபதிகள் பாராட்டியதும், ஈகை குணம் குறித்து பாதிரியார்கள் பாராட்டியதும். இந்துக்களும் கிருஸ்துவர்களும் இணைந்து முஸ்லீம்களுக்கு நோன்பு விருந்தளிப்பது மகிழ்வான ஒன்று என்று பேசியதும் நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.

இந்த மத ஒற்றுமை தொடர வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் வழியுறுத்தி பேசினர்.நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்த பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஹாஜி முகமது ரபி, அவர்களையும் மத ஒற்றுமை நிகழ்வு என்றவுடன் ஆர்வத்துடன் அனைத்து ஒத்துழைப்புகளையும் அளித்த சகோதரி லீமா ரோஸ், மற்றும் அனைத்து நிர்வாகிகளையும் துணை பொதுச்செயலாளர் பாராட்டியதுடன், நாட்டில் மத நல்லிணக்கமே தறபோதைய அவசிய தேவை என்பதையும் கோவை போன்ற மதபதட்டம் நிறைந்த பகுதியில் இது போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் ,மனிதநேய ஜனநாயக கட்சியும் இது போன்ற மத ஒற்றுமை நிகழ்வுகளை முன்னெடுத்து வருவதை தெரியபடுத்தி வாழ்த்தினார்.

நிகழ்வில் மாநில துணை செயலாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர் ABS. அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஆரீப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அமீர் அப்பாஸ், ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க